'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
நடிகரும், மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என்டிஆரின் மகனும், நடிகர் ஜூனியர் என்டிஆரின் தந்தையுமான ஹரி கிருஷ்ணா (62), கார் விபத்தில் மரணமடைந்தார்.
ரசிகரின் இல்ல திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்று விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தார் ஹரி கிருஷ்ணா. தெலுங்கானாவில் உள்ள நலகொண்டா அருகே கார் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஹரி கிருஷ்ணா உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் இறந்து விட்டார்.
1967-ம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ணவாத்ரம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஹரிகிருஷ்ணா, ராம் ரஹீம், சீதாராமாராஜூ, லகிரி லகிரி லகிரிலோ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். ஆந்திர அரசின் நந்தி விருதும் பெற்றிருப்பவர், தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் ராஜ்யசபா எம்பியாகவும் இருந்துள்ளார்.
ஹரி கிருஷ்ணாவிற்கு லக்ஷ்மி, ஷாலினி என்ற இரண்டு மனைவிகளும், ஜானகி ராம், கல்யாண் ராம், ஜூனியர் என்டிஆர்., என மூன்று மகன்களும், சுஹாசினி என்ற ஒரு மகளும் உள்ளனர்.
இந்த துயர சம்பவம் தெலுங்கு திரையுலகினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.