'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
திரையுலகையும் காஸ்டிங் கவுச் என்கிற வார்த்தையையும் பிரிக்க முடியாது போல.. சமீபகாலமாக காஸ்டிங் கவுச் என்கிற வார்த்தை திரையுலகையையே கதிகலங்க வைத்து வருகிறது. வாய்ப்பு தருவதாக சொல்லி படுக்கைக்கு அழைக்கும் சினிமா பிரபலங்களை பற்றி அவ்வப்போது சாதாரண நடிகைகளில் இருந்து முன்னணியில் உள்ள நடிகைகள் வரை சிலர் புகார் பாத்திரம் வாசித்து வருகிறார்கள்.
சமீபகாலமாக தெலுங்கு, தமிழ் திரையுலகையே தனது புகார்களால் கத்தி கலங்க வைத்து வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி.. மலையாள நடிகை ஹனிரோஸ் மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் இருக்கிறது என சமீபத்தில் ஒரு குண்டை தூக்கி போட்டார் .
இந்தநிலையில் முன்னாள் கதாநாயகி மீனா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தொண்ணூறுகளிலும் காஸ்டிங் கவுச் இருந்ததாக கூறியுள்ளார். ஆனால் தன்னை அது போன்ற எந்த விஷயங்களும் தொந்தரவுக்கு உள்ளாக்கவில்லை என்றும், ஆனால் அந்த சமயத்தில் சில இளம் நடிகைகள் அப்படிப்பட்ட சங்கடத்தை எதிர்கொள்ள நேர்ந்தது என்றும் கூறியுள்ளார் மீனா.