மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பொன்ராம் இயகக்த்தில் சிவகார்த்திகேயன், சமந்தா இணைந்து நடித்துள்ள படம் - 'சீமராஜா'. இந்தப்படத்தை தொடங்கும்போதே விநாயகர் சதுர்த்தி விடுடுறையை முன்னிட்டு செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தனர்.
அதன்படி சீமராஜா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி மதுரையில் நடத்தினார்கள். 'சீமராஜா' படத்தை ஏற்கனவே திட்டமிட்டபடி செப்டம்பர் 13-ஆம் தேதி சோலோவாக வெளியிட்டு கல்லா கட்டலாம் என திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் கன்னட இயக்குநர் பவன்குமார் இயக்கத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ள யு டர்ன் படமும், விஜய்சேதுபதி நடித்துள்ள 96 படமும், கார்த்திக் நரேன் இயக்கியுள்ள நரகாசூரன் படமும் செப்டம்பர் 13-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த சீமராஜா தயாரிப்பு தரப்பு, சமந்தா மூலம் யு டர்ன் தயாரிப்பு நிறுவனத்தை அணுகியுள்ளனர். அதாவது செப்டம்பர் 13க்கு பதில் ஒருவாரம் கழித்து யு டர்ன் படத்தை ரிலீஸ் செய்யும்படி வேண்டுகோள் வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் யு டர்ன் தயாரிக்கப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதியை மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டனர் தயாரிப்பாளர்கள்.
இதே கோரிக்கையை மற்ற படங்களின் தயாரிப்பாளர்களிடமும் வைத்திருக்கிறதாம் சீமராஜா தரப்பு. இதனால் 'சீமராஜா' வெளியாக உள்ள செப்டம்பர் 13 அன்று எத்தனை படங்கள் வெளிவரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.