தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்சில் தன்னுடைய முத்திரையை அழுத்தமாக பதிய வைத்து வருகிறார் நடிகர் அரவிந்த்சாமி. மலையாள ரீமேக்காக உருவான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் அவ்வளவாக வெற்றி பெறாவிட்டாலும் அடுத்தடுத்து அவர் நடித்து வரும் படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
அந்தவகையில் இந்த செப்டம்பர் மாதம் மட்டும் அவர் நடித்துள்ள மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் (செப்-28), கார்த்திக் நரேனின் நரகாசூரன் (செப்-13) மற்றும் சதுரங்க வேட்டை 2 (செப்-20) என மூன்றும் பெரிய படங்கள் தான். அந்தவகையில் செப்டம்பர் மாத சினிமா அரவிந்த்சாமியின் கைகளுக்குள் போய்விட்டது என தாராளமாக சொல்லலாம்.