சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ராஜூ முருகன் இயக்கும் ஜிப்ஸி படத்தில் குதிரையுடன் இந்தியா முழுவதும் பயணிக்கிறார் ஜீவா. இப்போது அவரது வழியில் விக்ராந்த் ஒரு ஒட்டகத்துடன் இந்தியா முழுக்க பயணிக்க இருக்கிறார். படத்தின் பெயர் பக்ரீத். சிகை மற்றும் பட்சி படங்களை இயக்கிய ஜெகதீசன் சுபு, ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். எம்10 புரொடக்ஷன் சார்பில் சிவா, சந்தானம், எம்.எஸ்.முருகராஜ் தயாரிக்கிறார்கள். இமான் இசை அமைக்கிறார். வசுந்தரா ஹீரோயின். மற்ற நடிகர் நடிகைகள் தேவு நடந்து வருகிறது. படம் பற்றி இயக்குனர் ஜெகதீசன் சுபு கூறியதாவது:
விவசாயம் செய்வதை பெருமையாக நினைத்து, இக்கட்டான சூழ்நிலையிலும் விவசாயத்தை மேற்கொள்கிற முயற்சியில் இருக்கிற நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த ஒருவனின் வாழ்க்கையில் ஒரு ஒட்டகம் திடீரென நுழைகிறது. அந்த ஒட்டகத்தினால் அவனது குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் அதனால் அவன் மேற்கொள்ளும் நெடுந்தூர பயணத்தில் அவன் சந்திக்கும் மனிதர்களும், அதனால் ஏற்படும் திருப்புமுனைகளுமே படத்தின் கதை.
இந்தியா முழுவதும் பயணிக்கும் இப்படத்தில், அந்தந்த ஊர் பழக்க வழக்கங்கள் மற்றும் அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கையை இயல்பாக பதிவு செய்கிறோம். இதற்காக சென்னை, ராஜஸ்தான், கோவா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு தடத்த திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.