தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித், நடித்து வரும் படம் 'விஸ்வாசம்'. அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முதன்முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்கிறார் இமான். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
ஐதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் விஸ்வாசம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்தப்படியாக சென்னையில் படப்பிடிப்பு தொடர இருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் எப்போது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக இருந்து வந்தது.
இன்று(ஆக., 23) அதிகாலை பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. பர்ஸ்ட் லுக்கில் அஜித் இரண்டு வேடத்தில் தோற்றமளிக்கிறார். நீண்ட தாடியுடன் வயதான மற்றும் இளமையான தோற்றத்தில் அஜித் இருக்கிறார். கிராமம், நகரம் என கலந்து குடும்ப சென்ட்டிமென்ட்டாக ஆக்ஷ்ன் கலந்த படமாக விஸ்வாசம் உருவாகி வருகிறது. படம் 2019 பொங்கலுக்கு வெளியாவதையும் போஸ்டரில் உறுதிப்படுத்தி உள்ளனர்.
அஜித், சிவா இருவரும் சாய்பாபாவின் பக்தர்கள். அவருக்கு வியாழக்கிழமை உகந்தநாள். தங்களின் முந்தைய படங்களையும் வியாழக்கிழமைகளில் படம் சம்பந்தமான விஷயங்களை அறிவித்தவர்கள் விஸ்வாசம் பர்ஸ்ட் லுக்கையும் வியாழக்கிழமை சென்ட்டிமென்ட்டில் இருந்து துவங்கி உள்ளனர்.
விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் செய்தி வெளியான போதும் சரி, வெளியான பின்பும் சரி அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். அதோடு டிரண்ட்டிங்கிலும் கொண்டு வந்துள்ளனர்.