பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஷங்கர் - ரஜினி கூட்டணியில் பிரம்மாண்ட படமாக உருவாகி வருகிறது 2.0. ரஜினியுடன் அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்சன் தயாரிக்கிறது.
ரூ.400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில், ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் உதவியோடு இப்படம் தயாராகி வருகிறது. கிராபிக்ஸ் பணிகள் நிறைவடையாததால் தொடர்ந்து பட ரிலீஸ் தள்ளி போய் கொண்டே இருக்கிறது. வருகிற நவ., 29-ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்றின் மேக்கிங் வீடியோ லீக் ஆகி உள்ளது. பிபிசி லோகோ உடன் இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திர லோகத்து சுந்தரியே என்ற பாடலுக்கு எமி ஜாக்சன் மற்றும் நடன கலைஞர்கள் ஆடுகிறார்கள்.
3டி தொழில்நுட்பத்தில் இந்தப்பாடல் படமாக்கப்படுகிறது. அது எப்படி உருவாகிறது என்பதை ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள், நடன அமைப்பாளர்கள் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் விவரிப்பது போன்று இந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவில் ரஜினியும் இடம்பெறுகிறார். ஆனால் அவரை விட எமியே இந்த பாடலில் பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறார்.
#2point0 - BBC - Exclusive!#2point0Teaser pic.twitter.com/vluaf458Wi
— Vijay Andrews (@yamanYAMARAJ) August 21, 2018