இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கேரளாவில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக அருகிலுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒருபக்கம் பேரிடர் மீட்பு குழு வீரர்கள் பம்பரமாக சுழன்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அதேசமயம் இந்த வெள்ளத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பேர்களை காப்பாற்றிய ரியல் ஹீரோக்கள் என்றால் அது மீனவர்கள் தான்.
தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, ஆபத்தான பகுதிகளுக்கு சென்று வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை மீட்டு முகாம்களில் சேர்த்ததில் இவர்கள் பங்கு அலாதியானது. பலரும் இவர்களது சேவையை பாராட்டி வரும் வேளையில் நடிகை அமலாபாலும் மீனவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, "ஹாலிவுட்டில் ஸ்பைடர்மேன், பேட்மேன், அயர்ன்மேன் என பலர் இருக்கலாம். இவர்கள் அனைவரையும் ஒன்றாக சேர்த்தது போல எங்கள் கேரளாவில் பிஷர்மேன்கள் இருக்கிறார்கள்" என சிலாகித்துள்ளார்.