வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
'பாகுபலி' திரைப்படங்களுக்குப் பிறகு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தெலுங்கு படம் 'சைரா'. சிரஞ்சீவி நடிக்கும் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 1800 காலக்கட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய சுதந்திர போராட்ட வீரர் நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது
1.19 நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில் சிரஞ்சீவி, கோட்டை சுவரின் உச்சியில் கம்பீரமாக நிற்கிறார். குதிரையில் பாய்ந்து செல்வது, போர் புரிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. டீசர் வெளியான 6 மணிநேரத்தில் 30 லட்சம் பார்வைகளை கடந்து, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
சுரேந்தர ரெட்டி இயக்கி உள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, ஹுமா குரேஷி, சுதீப் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கின்றனர்.