ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித், நடித்து வரும் படம் 'விஸ்வாசம்'. ஐதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தற்போது விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அங்கு நடந்து வரும் படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்களில் அதாவது, ஆகஸ்ட் 23-ஆம் தேதியுடன் முடிவடைகிறது!
ஐதராபாத்தில் பேக்கப் ஆனதும் அடுத்து 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்கிறது. இந்நிலைலியில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் எப்போது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் செப்., 13-ம் தேதி பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வந்தன.
ஆனால் இப்போது அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட்லுக்கை வருகிற 23-ஆம் தேதி வியாழக்கிழமை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அஜித், சிவா இருவரும் சாய்பாபாவின் பக்தர்கள். அவருக்கு வியாழக்கிழமை உகந்தநாள். எனவே இவர்கள் இருவரும் இதற்குமுன் இணைந்த படங்களின் புரமோஷன் உட்பட அனைத்து விஷயங்களையும் வியாழக் கிழமைகளிலேயே செய்தனர்.
அந்த சென்டிமென்ட்டை 'விஸ்வாச'த்திலும் தொடர்ந்து செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு தான் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட்லுக்கை வியாழக்கிழமையன்று வெளியிடுவது.
சத்யஜோஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித்துடன் நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் என பலர் நடித்து வருகின்றனர். டி.இமான் இசை அமைத்து வரும் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது.