தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் பொன்ராம் இயக்கத்தில் அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் முக்கியமான படமாகும். மெகா ஹிட்டடித்த அந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோரும் நடித்திருந்தனர்.
அதன்பிறகு பொன்ராம் இயக்கிய ரஜினிமுருகன் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் தற்போது சீமராஜாவில் நடித்து வருகிறார். இந்த படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது.
இந்த நிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் கதையை காமிக்ஸ் புத்தகத்தில் எழுதப்போகிறாராம் டைரக்டர் பொன்ராம். இது தற்போதைய நடிகர்களில் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே கிடைத்துள்ள பெருமை என்கிறார்கள்.