ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்சினிமாவில் வருடத்துக்கு நான்கைந்து படங்களை இயக்கியவர்கள் என்று கடந்த காலங்களில் பெயரெடுத்த ராமநாராயணன் பாணியில் அடுத்தடுத்து படங்களை இயக்க ஆரம்பித்துவிட்டார் சுசீந்திரன்.
ஜீனியஸ்', 'ஏஞ்சலினா' என இரண்டு படங்களை இயக்கி முடித்துள்ள சுசீந்திரன், இப்போது 'சாம்பியன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.
இந்த படத்தை அடுத்து பெண்கள் கபடியை பின்னணியாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் சுசீந்திரன். சசிகுமார் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற அக்டோபர் மாதம் துவங்க திட்டமிட்டுள்ளார்.
சுசீந்திரன் இயக்கிய முதல் படமான 'வெண்ணிலா கபடிக் குழு' ஆண்கள் கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். இப்போது பெண்கள் கபடி விளையாட்டை கையிலெடுக்க இருக்கிறார்.