மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் சிம்ரன், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தில் த்ரிஷாவும் இணைந்துள்ளார்.
இந்த தகவலை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். நேற்று அந்தத் தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னணி ஹீரோக்கள் பலருடனும் இணைந்து நடித்த சிம்ரனும், த்ரிஷாவும் இதுவரை ரஜினியுடன் இணைந்து நடித்ததில்லை.
நீண்ட நாட்களாகவே சிம்ரனும், த்ரிஷாவும் ரஜினியுடன் நடிக்க முயற்சி செய்து வந்தனர். அவர்களின் முயற்சிக்கு இப்போது கார்த்திக் சுப்பராஜ் படத்தின் மூலம் பலன் கிடைத்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் பேசிய ரஜினி, இனி தன்னுடைய மகள் பேத்தி வயது நடிகைகளுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால், இந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. த்ரிஷா எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.