ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திரைப்பட நடிகையாக, அரசியல்வாதியாக பல சாதனைகளைப் புரிந்த ஜெயலலிதாவிற்கு, அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் என்ற பெயரில் புதிய சோதனை ஒன்று காத்திருக்கிறது. மூன்று பேர் இப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் விஜய், அறிமுக இயக்குனர் பிரியதர்ஷினி ஆகிய மூவர் தான் அந்தப் படங்களை இயக்கப் போகிறவர்கள். ஒரே சமயத்தில் எந்த ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமும் இப்படி போட்டி போட்டு தயாரிக்கப்பட்டதில்லை. ஆனால், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இப்படி போட்டி போட்டு எடுப்பதால் தேவையற்ற குழப்பங்கள் தான் வரும்.
ஒரே சமயத்தில் மூன்று படங்கள் என்பதால் ஜெயலலிதா கதாபாத்திரங்களில் நடிக்கப் போவது யார் யார் என்பதுதான் அடுத்த கேள்வியாக எழும். தற்போதைக்கு தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளில் அந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான நடிகைகள் யாருமில்லை. ஆனாலும், சிலர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கத் தயாராக இருக்கிறார்கள்.
ஒரே சமயத்தில் யார் எடுத்தாலும் அதை பொருத்தமாக எடுத்தால் மட்டுமே பெயர் வாங்க முடியும். அப்படி சரியாக எடுக்கவில்லை என்றால் அது பிழையாகிவிடும்.