விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
தெலுங்குத் திரையுலகின் பெரும் நட்சத்திரமான சிரஞ்சீவி நடிக்கும் 'சைரா' படத்தின் டீசர் நாளை ஆகஸ்ட் 21ல் வெளியாக உள்ளது. 'பாகுபலி' திரைப்படங்களுக்குப் பிறகு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் இதுதான்.
தென்னிந்தியத் திரைப்படங்களில் இதுவரை நடிக்காத அமிதாப் பச்சன் முதல் முறையாக இந்தப் படத்தின் மூலம் தென்னிந்தியத் திரையுலகில் நடிக்கிறார். கன்னட நடிகர் சுதீப், தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, ஹுமா குரேஷி என பல பெரிய பிரபலங்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
ஆகஸ்ட் 22ம் தேதி சிரஞ்சீவியின் பிறந்த நாள் வருவதால், அதற்கு ஒரு நாள் முன்னதாகவே இப்படத்தின் டீசரை நாளை வெளியிட உள்ளார்கள். சிரஞ்சீவி ரசிகர்கள் மட்டுமல்லாது, தெலுங்குத் திரையுலகினரும், ரசிகர்களும் இப்படத்தின் டீசருக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு சிரஞ்சீவி பிறந்தநாளன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும், மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது. படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமான ஏ.ஆர்.ரகுமான் பின்னர் படத்திலிருந்து விலகியது படத்திற்குப் பின்னடைவாகக் கருதப்பட்டது. இருப்பினும், ஹிந்தித் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அமித் திரிவேதி இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.