தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளப் படங்களில் சின்னச் சின்ன ஆனால் முக்கியமான வேடங்களில் நடித்து வருபவர் ராஜீவ் பிள்ளை . தமிழில். 'தலைவா' படத்தில் விஜய்யுடன் நடித்துள்ள இவர், 'ஆம்பள' படத்தில் படத்திலும் வில்லனாக நடித்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இவரது திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது..
திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கேரளாவை பெருமழை வெள்ளம் புரட்டிப்போட, தற்போது திருமண வேலைகளை நிறுத்தி மீட்பு பணிகளில் இறங்கியுள்ளார் ராஜீவ் பிள்ளை. இவரது வீடு இருக்கும் பகுதியில் தண்ணீரில் சிக்கி தவிப்பவர்களை மீட்டு அருகிலுள்ள நிவாரண முகாம்களில் சேர்க்கும் பணியில் கடந்த மூன்று நாட்களாக இறங்கிவிட்டார்.
மழை ஆரம்பித்த சமயத்தில் தனது திருமணத்தை எளிமையாக நடத்திவிட வேண்டும் என நினைத்தாராம். ஆனால் தற்போதுள்ள சூழலை பார்த்தபின் வெறும் பத்து பேர் முன்னைலையில் தாலிகட்டும் சடங்கை மட்டும் நடத்தி, திருமணத்தை இன்னும் எளிமையாக நடத்த முடிவு செய்துவிட்டாராம் ராஜீவ் பிள்ளை.