ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மழை தவிக்கும் கேரளாவுக்கு திரையுலக நட்சத்திரங்கள் தங்கள் பங்காக நிதி உதவி செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தங்களது சொந்த தேசம் தண்ணீரில் தத்தளிப்பது கண்டு, மலையாள நடிகர் சங்கமான அம்மா (AMMA) தனது பங்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு 40 லட்ச ரூபாய் அளித்திருந்தது.
தற்போது மேலும் பத்து லட்ச ரூபாய் தொகையை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்காக கொடுத்திருக்கிறது அம்மா.. இந்த தொகையை நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள முகேஷ் மற்றும் ஜெகதீஷ் இருவரும் முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.