ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
அல்லு அர்ஜுன் நடித்த சூப்பர்ஹிட் படம் தான் சரோனைடு. இந்தப்படத்திற்கும் தற்போது பட்டையை கிளப்பிவரும் அர்ஜூன் ரெட்டி நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் துளிகூட சம்பந்தமில்லையே என்கிற சந்தேகம் தோன்றுகிறதா..? விஷயம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான கீதா கோவிந்தம் படம் செம ஹிட்டாகி அதன் ஹீரோவான விஜய் தேவரகொண்டாவின் கிரீடத்தில் இன்னொரு மயிலிறகை சூட்டியுள்ளது.
ஆனால் இயக்குனர் பரசுராம் இந்தப்படத்தின் கதையை எழுதிமுடித்ததும் இதில் அல்லு அர்ஜுனைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்திருந்தாராம். அந்தசமயத்தில் தான் அல்லு அர்ஜுன் நடித்த சரோனைடு படம் வெளியானது. அது அல்லு அர்ஜூனின் இமேஜையே மாற்றிப்போட்டது..
இனி தனது கதைக்கு அல்லு அர்ஜூன் பொருத்தமாட்டார் என முடிவுசெய்த இயக்குனர் பரசுராம் அல்லு அர்ஜுனே அந்த கதையில் விரும்பி நடிக்க வந்தாலும் அதை ஏற்க கூடாது என்கிற மனநிலைக்கு உடனே வந்துவிட்டாராம். அதன்பின்னர் தான் விஜய் தேவரகொண்டா பக்கம் தனது பார்வையை திருப்பினாராம்.