மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அவரின் சகோதரியாக நடித்தவர் சுஜாதா குமார். பாலிவுட்டில் சில படங்களிலும், ஏராளமான ஹிந்தி தொடர் மற்றும் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
புற்றுநோயால் கடந்த சில மாதங்களாகவே அவதிப்பட்டு வந்த சுஜாதா, மும்பையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று(ஆகஸ்ட் 20) இரவு காலமானார்.
இந்த தகவலை சுஜாதாவின் சகோதரி சுசித்ரா டுவிட்டரில் உறுதிப்படுத்தினார். "என் சகோதரி சுஜாதா நம்மை விட்டு பிரிந்துவிட்டார். அவர் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியவில்லை" என கூறியிருக்கிறார்.