இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஷால் தயாரித்து நடித்த படம் இரும்புத்திரை. சமந்தா, அர்ஜுன், ரோபோ சங்கர், ஸ்ரீஜா ரவி, சுமன், வின்செண்ட் அசோகன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார். கடந்த மே மாதம் 11ந் தேதி வெளியான படம், சென்னை எஸ்கேப் தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது. இந்தக் காலத்தில் ஒரு படம் 100 நாள் ஓடுவதும், அதற்கு விழா கொண்டாடுவதும் மிகவும் அபூர்வம்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால் தனது பிறந்த நாளான ஆகஸ்ட் 29ந் தேதி இரும்புத்திரை 100வது நாள் விழாவை பிரமாண்டமாக கொண்டாட இருக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த விழாவில் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்குகிறார். அதோடு தனது பிறந்த நாளையொட்டி பல நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். ரசிகர்கள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுகிறார்.