இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
பாலிவுட் நடிகர் வருண் தவானும், அனுஷ்கா சர்மாவும், சுய் தாகா என்ற படத்தில் நடித்துள்ளனர். இது கைத்தறி துணிகளை பற்றிய விழிப்புணர்வு படம். இதில் வருண் தவான் தையற் கலைஞராகவும், அனுஷ்கா சர்மா எம்ராய்டரி போடுபராகவும் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் நடித்ததில் இருந்து வருண் தவானுக்கு கைத்தறி துணிகள் மீது பெரிய அளவில் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. தானும் கைத்தறி துணிகளை அணிய ஆரம்பித்திருக்கிறார். அதோடு தன் தந்தையின் 68வது பிறந்த நாளுக்கு அவரே தன் கைப்பட கைத்தறி துணியில் சட்டை தைத்து கொடுத்துள்ளார். படத்திற்காக கைத்தறி துணி செய்யும் முறையை கற்றுக் கொண்ட வருண் தவான், முதன் முறையாக தன் தந்தைக்கு இதனை செய்து கொடுத்துள்ளார்.
வருண் தவானும், அவரது அண்ணன் ரோஹித்தும் தந்தையின் பிறந்த நாளை மும்பை நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமாக கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் மகன் தைத்து கொடுத்து சட்டை அணிந்து வந்த தந்தை டேவிட், வருணின் தையல் வேலைப்பாடு குறித்து பெருமையாக பேசினார்.