'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
விஜய் இயக்கத்தில் சாம் இசையமைப்பில் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், தித்யா, மற்றும் பலர் நடிக்கும் 'லட்சுமி' படம் அடுத்த வாரம் ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாக உள்ளது. நடனத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் நடிக்க வைப்பதற்காக இந்தியா முழுவதுமிலிருந்து ஆடிஷன் நடத்தி பத்துக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களைத் தேர்வு செய்துள்ளனர். இந்தப் படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க சூப்பர் டான்சர் சீசன் 1 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற சிறுமியான தித்யா பண்டே நடித்துள்ளார்.
'லட்சுமி' படத்தில் நடித்துள்ள சிறுவர், சிறுமியர் அனைவருமே அவர்களது நடனத் திறமையால் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவாவையே ஆச்சரியப்பட வைத்துள்ளனர். அதிலும் தித்யாவின் நடனத் திறமையைக் கண்டு பிரபுதேவா மிகவும் வியப்படைந்துள்ளார். இது பற்றி அவர் கூறும் போது, “இந்தப் படத்திற்காக நடனக் காட்சிகள் படமாக்கப்படும் போது தித்யாவின் திறமை என்னை வியக்க வைத்துள்ளது. நான் கூட நனடமாடும் போது சில அசைவுகளை மறந்துவிட்டு 'ஒன் மோர் டேக்' கேட்டுள்ளேன். ஆனால், தித்யாவின் மூளை கம்ப்யூட்டர் போன்றது. ஒரு முறை நடன அசைவுகளைப் பார்த்துவிட்டால், படப்பிடிப்பின் போது கடைசி வரை ஒரு அசைவைக் கூட மறக்காமல் அப்படியே ஆடிவிடுவார். மிகப் பெரிய திறமைசாலி அவர்,” எனப் பாராட்டினார்.
தன்னுடைய நடனத் திறமையால் பிரபுதேவாவையை திணற வைத்துள்ளார் தித்யா என்கிறார்கள் படக்குழுவினர். 'லட்சுமி' படத்தைப் பார்த்தபின் அனைவரும் பிரபுதேவாவை விட தித்யாவைப் பற்றித்தான் அதிகம் பாராட்டிப் பேசுவார்களாம்.