'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் மீண்டும் அவரை வைத்து இயக்கியுள்ள படம் சீதக்காதி. இந்த படத்தில் அப்பா-மகன் என இரண்டுவிதமான மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார் விஜய சேதுபதி. அவருடன் அர்ச்சனா, பார்வதி, காயத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஜூங்கா படத்திற்கு பிறகு விஜயசேதுபதியின் தயாரிப்பில் ஆகஸ்ட் 24-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை வெளியாகும் நிலையில், சீதக்காதி அக்டோபர் 5-ந்தேதி வெளியாகிறது. இப்படம் அவரது 25வது படம் என்பதால், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதோடு இந்த படத்தை அதிகப்படியான தியேட்டர்களில் பிரமாண்டமாக வெளியிடவும் திட்ட மிட்டுள்ளனர்.