பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி படத்தில் நாயகனாக நடித்தவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்த அர்ஜூன் ரெட்டி படம்தான் தற்போது தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. பாலா இயக்கும் அந்த படத்தில் துருவ் விக்ரம் நடித்து வருகிறார்.
சாவித்ரி வாழ்க்கை கதையில் உருவான மகாநதி படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்த விஜய் தேவரகொண்டா, அந்த படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியானதால் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதோடு தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் நோட்டா என்ற படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்து ஆகஸ்டு 15-ந்தேதி வெளியான கீதா கோவிந்தம் என்ற படம் தமிழ்நாட்டிலும் வெளியானது. அந்த படம் முதல்நாளில் ரூ. 1.30 கோடி வசூலித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் வெளியான எந்த தெலுங்கு படமும் ஒரேநாளில் இந்த அளவுக்கு வசூலித்ததில்லையாம்.