டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கன்னடத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற படம் 'யு-டர்ன்'. பவன்குமார் இயக்கத்தில் வெளிவந்த அந்தப்படம் சமந்தா நடிக்க தமிழ், தெலுங்கில் ரீ-மேக் ஆகி உள்ளது. ஆதி, பூமிகா, ராகுல் ரவீந்திரன், நரேன் மற்றும் பலர் நடிக்கும் இப்படம் செப்டம்பர் 13ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரு மேம்பாலத்தில் நடக்கும் மர்மமான சம்பவங்களை மையமாக வைத்து ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆக இப்படம் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக இருக்கும் சமந்தா இதுவரை நாயகர்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படங்களிலும் அவருக்கென ஒரு பெயர் கிடைக்கும் அளவிலான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
தனி நாயகியாக அவர் நடிக்கும் முதல் படம் 'யு டர்ன்'. அதுவும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகியுள்ளது. இதுவரை தமிழில் தனி நாயகியாக நடித்து வெற்றியைப் பெற்றவர் நயன்தாரா மட்டுமே. அவருக்கு அடுத்து த்ரிஷா அப்படி நடித்தாலும் அவருக்கு பெரிய வரவேற்பில்லை. இப்போது 'யு டர்ன்' மூலம் புது டர்ன் எடுத்துள்ள சமந்தாவுக்கு நயன்தாரா போல வெற்றி கிடைத்தால் அது குறிப்பிடத்தக்க வெற்றியாக அமையும்.