இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த ஐந்து வருடங்களாக தனது காந்தக் குரலால் ரசிகர்கள் மனதை ஆட்கொண்டவர் பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி. கண்பார்வை அற்றவரான இவர், சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என நிரூபித்தவர். இவரை மலையாள நாட்டின் பொக்கிஷம் என்று தான் கேரள ரசிகர்கள் அழைக்கிறார்கள். தமிழிலும் இவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு தந்து பாட வைக்கிறார்கள் இசையமைப்பாளர்கள்.
கடந்தவருடம் பிப்ரவரியில் நடைபெற இருந்த இவரது திருமணம் கூட கடைசி நேரத்தில் நின்றுபோனது. இந்தநிலையில் வைக்கம் விஜயலட்சுமிக்கு வாழ்க்கை படமாக உருவாகிறது. விஜயகுமார் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இதில் விஜயலட்சுமியின் கதாபாத்திரத்தில் ஹனன் என்கிற கல்லூரி மாணவி நடிக்கிறார்.
குடும்ப சூழல் காரணமாக மீன்வாங்கி வந்து விற்றுவிட்டு அதன்பின் கல்லூரி செல்லும் மாணவியாக சமீபத்தில் கேரளா முழுதும் அறியப்பட்டு பிரபலமானவர் தான் இந்த ஹனன். இவரை தேடி சினிமா வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் தான் இந்தப்படத்தில் விஜயலட்சுமியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹனன்.