பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அண்டை மாநிலமான கேரளாவில் வரலாறு காணாத மழையினால் மக்கள் தத்தளித்து வருகிறார்கள். அதன்காரணமாக வெள்ள நிவாரண நிதியாக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கேரளாவுக்கு நிதியுதவி சென்று கொண்டிருக்கிறது. அதோடு, சினிமா பிரபலங்கள் பலரும் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் நடிகர் சித்தார்த் ஒரு புதிய சவாலை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதாவது, கேரளா டொனேசன் சேலஞ்ச் என்கிற சவாலை தொடங்கியுள்ளார். அதோடு, நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன். இதனை நீங்கள் படிப்பதற்கும், பகிர்வதற்கும் நான் என்ன செய்ய வேண்டும். நான், கேரளா டொனேசன் சேலஞ்ச்-ஐ செய்தேன். அற்புதமாக இருந்தது. நீங்களும் செய்வீர்களா பிளீஸ் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், கேரளா வெள்ள நிவாரண நிதியாக தான் ரூ. 10 லட்சம் வழங்கியதற்கான கடிதத்தையும் இணைத்துள்ள சித்தார்த், கேரளாவிற்கு முடிந்தவரை உதவி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.