ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஓவியா நடித்து வரும் படத்தின் பெயர் 90எம்எல். நிவிஸ் என்டர்டெயின்ட்மென்ட் சார்பில் உதீப் தயாரித்திருக்கிறார். ஓவியாவுடன் பொம்மு லட்சுமி, ஸ்ரீகோபிகா, மோனிஷா நடித்துள்ளனர். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சிம்பு இசை அமைத்துள்ளார். படம் பற்றி அனிதா உதீப் கூறியதாவது:
படத்தின் தலைப்பை பார்த்துவிட்டு இது போதை படம், டாஸ்மாக் படம் என்று நினைக்கிறார்கள். அது தவறு. தலைப்புக்கான காரணம் படத்தில் இருக்கிறது. இப்போதைக்கு சஸ்பென்ஸ். எல்லா அம்சங்களும் கலந்த பக்காவான பொழுதுபோக்கு படம். பொதுவாக திரைப்படங்களில் ஆண் நண்பர்கள் பற்றித்தான் கதைகள் வருகிறது. ஆண்கள் தான் நட்புக்கு அத்தாரிட்டி போன்றே காட்டுகிறார்கள். அதை உடைத்து பெண்களின் நட்பை பேசுகிற படமாக இது உருவாகி இருக்கிறது. ஆண்களின் நட்பு டாஸ்மாக்கிலும், கல்லூரியிலும் உருவாவதாக கதைகள் வந்திருக்கிறது. பெண்களின் நட்பு எங்கே உருவாகிறது. எப்படிப்பட்ட சக்தி கொண்டது என்பதை இந்தப் படம் காட்டும் என்கிறார் அனிதா உதிப்.