ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
ஜெய்சக்தி மூவீஸ் சார்பில் தயாராகி உள்ள படம் குட்டி தேவதை. சோதுவேந்தன், தேஜா ரெட்டி, அறிவரசு என்ற புதுமுகங்களுடன் எம்.எஸ்.பாஸ்கார், வேல ராமமூர்த்தி, வாசுவிக்ரம், காயத்திரி, குழந்தை நட்சத்திரம் ராஸ்மி ஆகியோர் நடிக்கிறார்கள். நவுசத், சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். அமுதாபாரதி இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் அலெக்சாண்டர் கூறியதாவது:
நாம் 21ம் நூற்றாண்டில் வாழந்தாலும் இன்றைக்கும் ஜாதி கொடுமைகளும், ஆணவக்கொலையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை மையப்படுத்தி உருவாகி இருக்கும் படம். ஒரு கிராமத்தில் ஜாதி கட்டுபாடுகளை உடைத்து காதலிக்கும் ஜோடிகளை ஆதிக்க சாதியினர் ஆணவக்கொலை செய்ய முடிவெடுக்கிறார்கள். ஊரே காதலர்களை கொல்ல திட்டமிடுகிறார். அதிலிருந்து அவர்கள் தப்பித்து எப்படி காதலில் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் கதை. என்கிறார் அலெக்சாண்டர்.