ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள் வெளிவரும்போது, அன்று அதிகாலை ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிகள் திரையிடுவார்கள். சென்னையை பொருத்தவரையில் நான்கைந்து தியேட்டர்களில் இந்த சிறப்பு காட்சிகள் இருக்கும். ஆனால் இதனை முறியடித்து சாதனை படைத்திருக்கிறார் நயன்தாரா.
நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் நடித்த கோலமாவு கோகிலா படம் இன்று வெளியானது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை புதுமுகம் நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு நிகராக 402 தியேட்டர்களில் இன்று படம் வெளிவந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 50 தியேட்டர்களில் ரசிகர்களுக்கான அதிகாலை சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 10 தியேட்டர்களில் அதிகாலை காட்சி திரையிடப்பட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு ஹீரோயினுக்காக இத்தனை சிறப்பு காட்சிகள், இவ்வளவு பெரிய ஓப்பனிங் கிடைத்திருப்பது நயன்தாராவுக்கு மட்டுமே. இந்த படம் வெற்றி பெற்று விட்டால் நயன்தாராவின் சம்பளம் 6 கோடியாக உயரும் என்கிறார்கள்.