'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருகிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கும் இப்படத்தில் கல்லூரி மாணவர்களாக, பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் நடித்து வருகின்றனர்.
இந்தப்படத்தில் லேட்டஸ்ட் இணைப்பாக இப்போது த்ரிஷாவும் இணைந்துள்ளார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன் அந்த வேடத்தில் நடிக்க த்ரிஷா முயற்சி செய்தார். கடைசியில் அந்த வாய்ப்பு த்ரிஷாவுக்கு கிடைக்கவில்லை, மாறாக சிம்ரனுக்கு கிடைத்தது.
இந்நிலையில் இப்படத்தில் த்ரிஷா இணைந்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்பது குறித்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்துவிட்ட த்ரிஷா, இதுவரை ரஜினியுடன் இணைந்து நடித்ததில்லை. அந்த வாய்ப்பு இப்போது கார்த்திக் சுப்பராஜ் படம் மூலம் அவருக்கு கிடைத்திருக்கிறது.