பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
கேரளாவில் பெய்துவரும் கனமழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதி உதவியை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு பிஜூமேனன் நடிப்பில் வெளியான ரக்ஷதிகாரி பைஜூ படக்குழுவினர் ரூ.2 லட்சத்தை நிவாரண நிதியாக அளித்தனர்.
சமீபத்தில் இந்தப்படத்திற்கு கேரள அரசு விருதும் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.. அதில் கிடைத்த அந்த 2 லட்ச ரூபாயைத்தான் நிவாரண நிதியாக விவசாயத்துறை அமைச்சர் சுனில்குமாரை சந்தித்து வழங்கியுள்ளனர். இந்த இந்தப்படத்தின் இயக்குனர் ரஞ்சன் பிரமோத், தயாரிப்பாளர்கள் அலெக்ஸ்சாண்டர் மேத்யூ மற்றும் சதிஷ் மோகன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.