ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் மெர்சல். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்தார். வசூல் சாதனை புரிந்த இப்படம் விரைவில் சீன மொழியில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் 14-15 தேதிகளில் துபாயில் சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் விஜய்யின் மெர்சல் படத்திற்கு 12 விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதாவது, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த வில்லன், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த பாடகர், சிறந்த பாடகி, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த காமெடியன் மற்றும் சிறந்த பாடகர்களுக்காக மட்டும் ஏ.ஆர்.ரகுமான், சித் ஸ்ரீராம் ஆகிய இருவரையும் சேர்த்து மெர்சல் படத்திற்காக 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.