ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தெலுங்கு சூப்பர் ஸ்டாரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் வாழ்க்கை வரலாறு, என்டிஆர் என்ற பெயரிலேயே தயாராகிறது. இதில் என்.டி.ராமராவாக, அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். நேற்று சுதந்திர தினத்தையொட்டி பாலகிருஷ்ணா, என்.டி.ராமராவ் வேடத்தில் இருக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டது. அச்சு அசலாக 100 சதவிகிதம் என்.டி.ஆர்., போலவே அவர் படத்தில் காட்சி தருவதை பார்த்து தெலுங்கு சினிமாவே மிரண்டு போய்விட்டது.
இந்தப்படத்தில் என்.டி.ராமராவ் மனைவி கேரக்டரில் வித்யா பாலன் நடிக்கிறார், சாவித்ரியாக கீர்த்தி சுரேசும், சந்திரபாபு நாயுடுவாக ராணாவும், அவரது மனைவி புவனேஸ்வரியாக மஞ்சிமா மோகனும், தயாரிப்பார் நாகி ரெட்டியாக பிரகாஷ்ராஜூம், நாகேஷ்வரராவாக சமந்தும், ராமநாயுடுவாக வெங்கடேசும், நடிகர் கிருஷ்ணாவாக மகேஷ்பாபுவும் நடிக்கிறார்கள். கிரிஷ் இயக்குகிறார். 200 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக தயாராகிறது படம்.