பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகைகள் இப்போதெல்லாம் ஹீரோயினுக்கு முக்கியத்தும் உள்ள கதைகளை தேர்வு செய்து ஆர்வத்துடன் நடித்து வருகிறார்கள். மாயா, அறம், டோரா, கோலமாவு கோகிலா படங்கள் நயன்தாராவுக்கு அமைந்தது. அதேபோல த்ரிஷாவும் மோகினி, நாயகி படங்களில் நடித்தார். இப்போது இவர்கள் வழியில் இணைந்திருக்கிறார் அமலாபால்.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் மேயாதமான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கும் அடுத்த படத்தில் அமலாபால் நடிக்கிறார். படத்தின் டைட்டில் ஆடை. இது ஹீரோயினுக்கு முக்கியத்தும் உள்ள புதுமையான கதை.
"பொதுவாகவே இது மாதிரியான கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பெண்கள் தொடர்பான கதை, பெண்கள் முன்னேற்றத்திற்கான படம் அல்லது சூப்பர் நாச்சுரல் ஹாரர் சினிமா என்று தான் சொல்வார்கள். ஆனால் இந்த படம் மேற்சொன்ன எந்த வகையிலும் சாராத அந்த முன் கணிப்புகளை உடைத்தெறியும் உணர்ச்சிகரமான கதை. படத்தின் மற்ற கதாபாத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தை பற்றிய முழு விபரம் வெளியிடப்படும்" என்கிறது தயாரிப்பு தரப்பு.