‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அட்டாரின்டிகி டாரிடி 'Attarintiki Daredi' தெலுங்குப் படத்தை தமிழில் ரீ-மேக் செய்கிறது லைகா புரொடக்ஷன்ஸ். பெரிய தொகை கொடுத்து அப்படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை வாங்கியது லைகா.
இந்த படத்தை சுந்தர்.சி. இயக்குகிறார். இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு 'ஹிப் பாப்' தமிழா ஆதி இசை அமைக்கிறார். இந்த படத்துக்கு முன்னதாக சுரேஷ்கமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு' படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு.
மாநாடு படத்தில் நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம், சுந்தர்.சி இயக்கும் படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளார் சிம்பு. 'லைகா புரொடக்ஷன்ஸ்' தயாரிக்கும் படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'செக்கச் சிவந்த வானம்' செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகிறது. இந்தப்படம் வெற்றி பெற்றால் சிம்புவின் சம்பளத்திலும் மாற்றம் இருக்கும் என்பது நிச்சயம்.