சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது |
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிரி ராவ் ஹைதரி மற்றும் பலர் நடிக்கும் படம் 'செக்கச் சிவந்த வானம்'. இப்படத்தின் நான்கு தோற்றங்களை இன்று மாலை 5 முணி முதல் வெளியிட உள்ளார்கள். படத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய கதாபாத்திரங்களின் முதல் பார்வையாக அவை வெளியாக உள்ளன. அனேகமாக, சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி ஆகிய ஹீரோக்களின் பார்வைகளாக அவை இருக்கலாம்.
தமிழ் சினிமாவில் 'மல்டி ஸ்டார்' படங்கள் அதிகம் வருவதில்லை. ஒரு சில இரண்டு ஹீரோ படங்கள் தான் வந்துள்ளன. இந்தப் படத்தில் முக்கியமான, வித்தியாசமான மூன்று ஹீரோக்கள் இருப்பதாலும், மேலும் சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட சிலர் மணிரத்னம் படத்தில் முதல் முறையாக நடிப்பதாலும் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நிறையவே எதிர்பார்ப்பு உள்ளது.
அதோடு, மணிரத்னத்தின் முந்தைய படமான 'காற்று வெளியிடை' படத்தை அவருடைய ரசிகர்களே மறக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்றைய 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் பார்வைகள் நிச்சயம் பரவசத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்.