ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் அறிமுகமான 5 ஹீரோக்களில் ஒருவர் பரத். அந்த 5 பேரில் இப்போதும் நடித்துக் கொண்டிருப்பவர்கள் சித்தார்த், பரத், நகுல். பாய்ஸ் படத்திற்கு பிறகு காதல் படம் தான் பரத்திற்கு தனித்த அடையாளத்தை கொடுத்தது. அதன் பிறகு பல படங்களில் நடித்தவர் திடீரென ஆக்ஷ்ன் ஹீரோவாக மாற அதுவே அவருக்கு பின்னடைவானது.
தற்போது பொட்டு, சிம்பா, காளிதாஸ் படங்களில் நடித்து வருகிறார். பரத்திற்கும், டென்டிஸ்ட் ஜெஸ்லிக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது பரத் - ஜெஸ்லி தம்பதிகளுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேய்களும் நலமாக உள்ளனர்.
"நான் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறேன். எனக்கு இரண்டு இளவரசர்கள் கிடைத்துள்ளார்கள்" என்ற மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் பரத். அவருக்கு திரைத்துறையிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.