ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் தனுஷ் நாயகனாக நடித்த மாப்பிள்ளை படத்தில் அறிமுகானவர் ஹன்சிகா. அதன்பிறகு வேகமாக வளர்ந்த அவர், தற்போது ஐம்பதாவது படத்தை எட்டிப்பிடித்து விட்டார். அதோடு அப்படத்தில் கதையின் நாயகியாகவும் நடிக்கிறார் ஹன்சிகா.
அப்படி ஹன்சிகா நடிக்கும் 50வது படத்தை ஜமீல் என்ற புதுமுகம் இயக்குகிறார். இந்த படத்தின் டைட்டீல் ஹன்சிகாவின் பிறந்த நாளில் வெளியிடுவதாக இருந்தது. ஆனால் திமுக தலைவர் கருணாநிதி இறந்த விட்டதால் டைட்டில் அறிவிப்பை தள்ளி வைத்தனர். அதோடு ஜூலை 11-ந்தேதி மாலை நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை ஹன்சிகாவின் 50வது பட டைட்டில் மஹா என்பது வெளியிடப்பட்டுள்ளது . தனுஷின் டுவிட்டரில் வெளியானதால் அவரது ரசிகர்களும் அதை ஷேர் செய்து வருகின்றனர்.