பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வழக்கமாக நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறும் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி முதன் முறையாக ஒரு நடிகரை பாராட்டி உள்ளார். அதுவும் சிம்புவை. ஸ்ரீரெட்டியின் கேள்வி ஒன்றுக்கு சிம்பு சரியான பதில் அளித்ததால் இந்த பாராட்டு சிம்புவுக்கு கிடைத்துள்ளது.
கடந்த சில நாட்களாக நடிகர் சிம்பு இணையதளம் ஒன்றில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்தார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் ஸ்ரீரெட்டியும் சிம்புவை கேள்வி கேட்டார். "உங்கள் எதிர்கால மனைவியிடம் என்னென்ன எதிர்பார்க்கிறீர்கள்?" என்பதுதான் ஸ்ரீரெட்டியின் கேள்வி அதற்கு பதில் அளித்த சிம்பு "ஸ்ரீரெட்டியின் பட்டியலில் நான் இல்லை என்பது அவரின் இந்த கேள்வி மூலம் தெளிவாக தெரிந்து விட்டது" என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த ஸ்ரீரெட்டி வீடியோ பதிவொன்றை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் அதில் "என் கேள்விக்கு பதில் அளித்ததற்கு நன்றி சிம்பு சார். உங்கள் அப்பா டி.ராஜேந்தரை போன்று நீங்கள் நல்ல மனிதர். உங்கள் இருவரையும் நான் மிகவும் மதிக்கிறேன். என்று குறிப்பிட்டிருக்கிறார்.