Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரம் மகனின் கார் மோதி 3 ஆட்டோக்கள் சேதம்

12 ஆக, 2018 - 10:31 IST
எழுத்தின் அளவு:
police-enquiry-for-vikram-son-dhuruv-on-car-accident

நடிகர் விக்ரமின் மகன் துருவ். அமெரிக்காவில் நடிப்பு, மற்றும் இயக்கம் படித்துள்ள துருவ் தற்போது பாலா இயக்கத்தில் வர்மா என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக். இதன் படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களாக நேபாளத்தில் நடந்தது. படப்பிடிப்பை முடித்து விட்டு சமீபத்தில்தான் துருவ் சென்னை திரும்பியிருந்தார்.


இந்த நிலையில் நேற்று இரவு துருவ் சென்ற சொகுசு கார் தேனாம்பேட்டை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் 3 ஆட்டோக்கள் சேதம் அடைந்தது. சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு ஆட்டோ டிரைவர் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து நடந்தது எப்படி? காரை ஓட்டியது துருவா?, வேறு டிரைவரா, காருக்கு என்ன சேதம் என்ற விபரங்கள் குறித்து பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தினர்.


துருவை கைது செய்த போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிறிது நேரத்திலேயே அவரை ஜாமினில் போலீசார் விடுவித்தனர்.


Advertisement
பிக் பாஸ் தொகுப்பாளருக்கும், போட்டியாளர்களுக்கும் கடும் போட்டிபிக் பாஸ் தொகுப்பாளருக்கும், ... சிம்புவை பாராட்டிய ஸ்ரீரெட்டி சிம்புவை பாராட்டிய ஸ்ரீரெட்டி


வாசகர் கருத்து (24)

உண்மைவிலம்பி வாய உத சொல்லுங்க ஜீ. முதல்ல பல்லு வெளக்கினானானு பாக்கணும். அமெரிக்காவுல கடைசியில வெளக்கிட்டு வந்தாப்புல தெரியுது!
Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
13 ஆக, 2018 - 05:35 Report Abuse
 nicolethomson திமிரு இருக்குற பணப்பேய்கள்
Rate this:
jagan - Chennai,இந்தியா
13 ஆக, 2018 - 03:06 Report Abuse
jagan விக்ரம் ஓர் MBC எனவே அந்த பகுதியில் அப்போது நடமாடிய FC ஒருவரை இதற்க்கு பொறுப்பாக்கி கைது செய்வதே சமூக நலன் காக்கும் செயல் ...இவரை கைது செய்வது சமூகநீதிக்கு எதிரானது
Rate this:
Udaya Kumar - Singapore,சிங்கப்பூர்
12 ஆக, 2018 - 20:19 Report Abuse
Udaya Kumar பண திமிர்
Rate this:
R chandar - chennai,இந்தியா
12 ஆக, 2018 - 20:11 Report Abuse
R chandar Why government is giving permission to powerful cc vehicle to ply on the road as our roads are very narrow and congestive due to so many vehicle getting registered every day. Government should not allow powerful CC two wheeler and car to ply on the road these car should be banned or speed of the vehicle should be restricted to minimum 40 km and person making accident in these type of vehicle should be ceased and see to it good compensation should be given to the affected person as per the value of car through which accident occured Police should See to it Law should be equal to all ,see that unwanted parking by autos and car should be banned and government should allow and provide them separate space to park public vehicle
Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Seemathurai
  • சீமத்துரை
  • நடிகை : வர்ஷா பொல்லம்மா
  • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
  Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
  Tamil New Film Kaaviyan
  • காவியன்
  • நடிகர் : ஷாம்
  • நடிகை : ஸ்ரீதேவி குமார்
  • இயக்குனர் :பார்த்தசாரதி
  Tamil New Film Aan Devathai
  • ஆண் தேவதை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ரம்யா பாண்டியன்
  • இயக்குனர் :தாமிரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in