Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக் பாஸ் தொகுப்பாளருக்கும், போட்டியாளர்களுக்கும் கடும் போட்டி

11 ஆக, 2018 - 20:08 IST
எழுத்தின் அளவு:
Big-competitive-between-vishwaroopam-2-and-Pyaar-Prema-Kadhal

தமிழ் டிவி வரலாற்றில் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியாக கடந்த வருடம் ஒளிபரப்பை ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சி அமைந்தது. தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கடந்த வருடம் ஒளிபரப்பான முதல் சீசனில் போட்டியாளர்களாகப் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் இருவரும் இணைந்து நடித்த 'பியார் பிரேமா காதல்' படம் நேற்று வெளியானது. அதே தினத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள 'விஸ்வரூபம் 2' படமும் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே பங்கேற்ற ரைசா 9வது வாரத்தில் 63வது நாளில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அந்த நிகழ்ச்சியில் 8வது வாரத்தில் 53வது நாளில் வைல்ட் கார்டு மூலம் நுழைந்தார் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடித்த 'பியார் பிரேமா காதல்' படம்தான் கமல்ஹாசன் நடித்து நேற்று வெளிவந்துள்ள 'விஸ்வரூபம் 2' படத்திற்கு சரியான போட்டியாக அமைந்துள்ளது. தொகுப்பாளரின் படமும், போட்டியாளர்களின் படமும் ஒரே நாளில் வெளிவந்திருப்பது ஆச்சரிய ஒற்றுமை என்றாலும் இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது திங்கள்கிழமை முழுமையாகத் தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மலையாள பிக்பாஸையும் விட்டுவைக்காத கமல்..!மலையாள பிக்பாஸையும் விட்டுவைக்காத ... விக்ரம் மகனின் கார் மோதி 3 ஆட்டோக்கள் சேதம் விக்ரம் மகனின் கார் மோதி 3 ஆட்டோக்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
13 ஆக, 2018 - 01:17 Report Abuse
Kumar கமலை பற்றி என்ன கழுவி ஊத்தினாலும் அவன் படம் ஓடும். இன்றைய நிலவர படி 50 கோடி வசூல் தாண்டியாச்சு (world wide ) கமல் உழைத்து முனைறினான், அதிர்ஷ்டத்தில் மேலை வர வில்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ispet rajavum idhaya raniyum
    Tamil New Film Viswasam
    • விஸ்வாசம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Neeya 2
    • நீயா 2
    • நடிகர் : ஜெய்
    • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
    • இயக்குனர் :எல்.சுரேஷ்
    Tamil New Film Monster
    • மான்ஸ்டர்
    • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
    • நடிகை : பிரியா பவானி சங்கர்
    • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in