ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மறைந்த திமுக., தலைவர் கருணாநிதி அரசியல்வாதி என்பதையும் தாண்டி, சிறந்த கதை, திரைக்கதை வசனகர்த்தா. திரைத்துறையில் அவர் ஆற்றிய பணி சிறப்பானது. இந்நிலையில், தமிழ் திரையுலகம் சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி கூட்டம், ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தெரிவித்திருப்பதாவது : மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், கலை இலக்கிய திரைத்துறை பிதாமகனுமான கருணாநிதிக்கு, திரை உலகம் ஆகஸ்டு 13ம் தேதி திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு, சென்னை அண்ணாசலை, காமராஜர் அரங்கில் அஞ்சலி கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பங்கேற்குமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், பெப்சி ஆகிய சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.