ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
பிரபல பாலிவுட் நடிகை இஷா குப்தா. ராஸ், ஹம்சகேல்ஸ், பேபி, ரஸ்டம், பாட்ஷாஹோ, கமாண்டோ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பிரபுதேவா, தமன்னா நடித்த தேவி என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இஷா குப்தா, "நான் விரைவில் ஒரு கிரிக்கெட் வீரரை மணந்து கொள்ள இருக்கிறேன்" என்று அறிவித்துள்ளார். அந்த கிரிக்கெட் வீரர் யார் என்று பெயர் குறிப்பிடவில்லை ஆனாலும், அவர் ஹர்திக் பாண்டே என்கிறார்கள்.
கடந்த பல மாதங்களாகவே இஷா குப்தாவும், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டேவும் ஜோடியாக ஊர் சுற்றி வருகிறார்கள். அதனால் இஷா குப்தா குறிப்பிடும் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டேவாக இருக்கலாம் எனதெரிகிறது.
ஹர்திக் பாண்டேவுடன் பாலிவுட் நடிகைகள் கிசுகிசுக்கப்படுவது முதல்முறை அல்ல. ஏற்கனவே, பரிணிதி சோப்ரா, எல்லி அவ்ரம் ஆகியோருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார்.