தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
கடந்த, 2000ல், வெளியான காதல் ரோஜாவே படத்தில் அறிமுகமானவர், பூஜா குமார். அதற்கு பின், ஒரு சில தமிழ் படங்களில் நடித்தாலும், தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதற்கு பின், சில ஹாலிவுட் படங்களில் நடித்த அவரை, விஸ்வரூபம் படம் மூலம், மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார், கமல். அதைத் தொடர்ந்து, உத்தம வில்லன் படத்திலும், கமல் ஜோடியாக நடித்தார். தற்போது, விஸ்வரூபம் - 2 படத்திலும், பூஜாவுக்கு வாய்ப்பு அளித்துள்ளார், கமல்.
இதுகுறித்து பூஜா கூறியதாவது:
'விஸ்வரூபம் முதல் பாகத்தில், கமலை வெறுக்கும் கேரக்டரில் நடித்திருந்தேன். ஆனால், இரண்டாம்
பாகத்தில், முழுக்க முழுக்க கமலுடன் இணைந்து,
எதிரிகளை பந்தாடும் கேரக்டர் எனக்கு. தண்ணீருக்குள் எதிரிகளுடன் சண்டையிடும் காட்சியில் நடித்துள்ளேன். என் கடுமையான உழைப்பிற்கு, கண்டிப்பாக பலன் கிடைக்கும் என, நம்புகிறேன். படத்துக்காக, பரவசத்துடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.