ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்தில் அனிருத் இசை என்றாலே அதற்கு தனி வரவேற்பு உள்ளது. அது எப்படிப்பட்ட வரவேற்பு என்பதை அவர் இசையமைக்கும், பாடும் பாடல்களின் யு டியூப் பார்வைகளை வைத்தும் புரிந்து கொள்ளலாம். அவர் இசையமைத்துள்ள 'கோலமாவு கோகிலா' படம் அடுத்த வாரம் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியாக உள்ளது.
தமிழில் மட்டும் இசையமைத்து வந்த அனிருத், த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன்கல்யாண் நடித்த 'அஞ்ஞாதவாசி' என்ற ஒரே ஒரு தெலுங்குப் படத்திற்கு மட்டும் இசையமைத்தார். கடந்த வருடம் வெளிவந்த அந்தப் படம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. அதன்பின் வேறு எந்த தெலுங்குப் படத்திற்கும் இசையமைக்க சம்மதிக்காமல் இருந்தார் அனிருத்.
இப்போது இரண்டாவது படமாக தெலுங்கில் 'ஜெர்சி' என்ற படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். நானி நாயகனாக நடிக்க உள்ள அந்தப் படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட படம். அந்தப் படத்திற்காக அனிருத் சம்பளமாக 1 கோடிக்கும் அதிகமாகக் கேட்டார் என்றும், ஆனால், 'அஞ்ஞாதவாசி' தோல்வியைப் பற்றிக் கூறி அவரை 80 லட்சத்திற்கு இசையமைக்க சம்மதிக்க வைத்திருக்கிறார்கள் என்றும் டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
தமிழில் அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள 'இந்தியன் 2' ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.