‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி வசூல் ஹீரோக்களில் ஒருவர் மகேஷ் பாபு. அவர், நடித்து வெளிவந்த பல படங்கள் தெலுங்கில் பெரிய வசூலைப் பெற்றுத் தந்த படங்கள். 'பரத் அனி நேனு' படத்திற்குப் பிறகு மகேஷ் பாபு நடித்து வரும் அவருடைய 25வது படத்தின் டைட்டில் அறிவிப்பு, இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்டது.
'மகர்ஷி' என பெயர் வைக்கப்பட்டுள்ள அந்தப் படத்தில் மகேஷ் பாபு, ரிஷி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு கல்லூரிக்குள் கையில் லேப்டாப்புடன் அவர் நடந்து செல்வது போன்ற கேஷுவலான டீசரும் இன்று வெளியிடப்பட்டது. பார்ப்பதற்கு கல்லூரி மாணவர் போலத் தோற்றமளிக்கும் மகேஷ்பாபுவை அவருடைய ரசிகர்கள் பாராட்டியும், பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள்.
'தோழா' படத்தை இயக்கிய வம்சி பைடிபள்ளி இந்த 'மகர்ஷி' படத்தை இயக்குகிறார். தேவிஸ்ரீபிரசாத் இயக்க, மோகனன் ஒளிப்பதிவு செய்கிறார். மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' படத்தில் நாயகியாக அறிமுகமான பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கெனவே டேராடூனில் நடந்து முடிந்துவிட்டது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற உள்ளது.