ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் வாரம் தவறாமல் புதிய படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் ஆகஸ்ட் 3ம் தேதி 10 படங்கள் வெளிவந்தது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. 'கஜினிகாந்த்' படத்தைத் தவிர கடந்த வாரம் வெளிவந்த மற்ற 9 படங்களும் சிறிய பட்ஜெட் படங்களே. இனி வரும் வாரங்களில் அந்த மாதிரி ஒரே நாளில் பத்து படங்கள் வெளிவரும் வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கும்.
நாளை ஆகஸ்ட் 10ம் தேதி 'விஸ்வரூபம் 2, பியார் பிரேமா காதல், அழகுமகன், 3 ரசிகர்கள், காதல் எனக்குப் பிடிக்கும்' ஆகிய ஐந்து படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் 'விஸ்வரூபம் 2' படம் மட்டும்தான் பெரிய பட்ஜெட் படம். கமல்ஹாசன் நடித்துள்ளதால் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு. முதல் பாகத்தைப் போல இந்தப் படம் ஓடுமா என்பதுதான் கேள்வி.
'விஸ்வரூபம் 2' படத்திற்குப் போட்டியாக 'பியார் பிரேமா காதல்' படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் இளைஞர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். ஒரு அப்பாவி இளைஞனும், பணக்காரப் பெண்ணும் காதலித்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதுதான் படத்தின் கதையாம். யுவன்ஷங்கர் ராஜா தயாரித்துள்ள முதல் படம். அவருடைய இசையில் பாடல்கள் ஏற்கெனவே பிரபலமாகி வருகின்றன. இளைஞர்கள் எதிர்பார்க்கும் அளவிற்குப் படமும் இருந்தால் இந்தப் படம் 'விஸ்வரூபம் 2' படத்திற்கு சரியான போட்டியைக் கொடுக்கும் என்கிறார்கள்.
மற்ற படங்களான 'அழகு மகன், 3 ரசிகர்கள், காதல் எனக்குப் பிடிக்கும்' ஆகியவை தாக்குப் பிடிக்குமா என்பது நாளை தெரியும்.