சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யான், பிக்பாஸ் ரைசா வில்சன் நடிக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. யுவன் சங்கர் ரஜாவின் 'YSR FILMS' நிறுவனமும், கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் சாட்லைட் உரிமையை ஜி தமிழ் தொலைக்காட்சி வாங்கியிருக்கிறது. இந்த படத்தை 'விக்ரம் வேதா', 'அவள்', 'தமிழ்ப்படம்-2' உட்பட பல படங்களை விநியோகம் செய்துள்ள டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தமிழகம் முழுக்க வெளியிட்டுள்ளது.
இன்று சுமார் 200 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் திமுக., தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக ரிலீஸ் தேதி நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது.