டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திமுக., தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். 6 மாதத்திற்கு முன்பே திட்டமிடப்பட்ட இசை நிகழ்ச்சிக்காக தனது குழுவுடன் ஆஸ்திரேலியா சென்றுள்ள அவர், அங்கிருந்து வீடியோ வடிவில் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது : தமிழ் பெருங்குடி மக்களே, கருணாநிதியின் மறைவு நமக்கெல்லாம் துக்க தினமாக ஆகிவிட்டது. இதை நாம் எப்படி ஆற்றிக் கொள்ள போகிறோம் என்று தெரியவில்லை.
அரசியல் தலைவர்களிலேயே கடைசி தலைவர் கருணாநிதி தான். சுத்தமான தமிழ் வசனங்களை அள்ளி அள்ளி வழங்கிய கடைசி திரைக்கதை வசனகர்த்தாவும் அவர் தான்.
அரசியல், கலை, இலக்கியம், தமிழ் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய அவரின் இழப்பு உண்மையிலேயே ஈடு என்ற வார்த்தைக்கு கூட ஈடு செய்ய முடியாத இழப்பு.
இசை நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியாவிற்கு வந்துவிட்டேன். 6 மாதத்திற்கு முன்பே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி என்பதால் கடைசிநேரத்தில் ரத்து செய்ய முடியாத சூழலில் உள்ளேன். உங்களுடன் நானும் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன். அவரின் ஆசி என்றும் நம்மோடு இருக்கும் என நம்புவன் நான். நன்றி!
இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.